Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதியின் தற்போதைய நிலை... ஃபேஸ்புக்கில் உருகிய துரைமுருகன்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து அந்தக் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

karunanithi
 

கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி இரவு, சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு உடல்நிலை தேறிய நிலையில், டிசம்பர் 7ஆம் தேதி  வீடு திரும்பினார். சிறிது நாள்களில், மீண்டும் நுரையீரல் மற்றும் தொண்டையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக மூச்சுவிட சிரமப்பட்டார். இதனால், உடனடியாக அதே காவேரி மருத்துவமனையில் 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பிய அவர், ஓய்வெடுத்துவருவதாகக் கூறப்பட்டது.

இதனிடையே கருணாநிதியின் 60 ஆண்டுக்கால சட்டப்பேரவை வைர விழா  மற்றும் 94-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க ஏற்பாடு செய்துவருகிறது. உடல்நிலை காரணமாக கருணாநிதி இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலைகுறித்து துரைமுருகன் உருக்கமான பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், 'தொண்டைக்குழி வழியாக குழாயை உள்ளே செலுத்தி அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால், பேச இயலவில்லை... கடந்த இரு தினங்களுக்கு முன், குழாயை எடுத்துவிட்டு துவாரத்தையும் அடைத்துவிட்டு பேசச் சொன்னார்கள். தலைவரிடம்  உங்கள் பெயர் என்ன எனக் கேட்க, "என் பெயர் கருணாநிதி'' என்றார்... அடுத்ததாக,  உங்களுக்கு யாரைப்பிடிக்கும் எனக்கேட்க, ''அறிஞர் அண்ணா'' என்றார்... பின்னர் என்னை யார் எனக்கேட்க, "துரை'' என்றதும், என் கண்கள் கசிந்தன... மீண்டு வருவார் தலைவர்... " என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close