Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பால் கலப்பட விவகாரம்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முதல்வர் அறிவுறுத்தல்

பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக தனியார் பால் நிறுவனங்கள் பல்வேறு ரசாயன பொருள்களை கலப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  குற்றம்சாட்டினார். குறிப்பாக, தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயன பொருள்கள் கலப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்தார். தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக  பால்முகவர்கள் சங்கம் செயல்படுவதாகவும்,  தவறு செய்த தனியார் பால் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்  எச்சரித்தார். 

Edapadi Palanisamy

இதையடுத்து, தனியார் பாலில் கலப்படம் என அமைச்சர் பேசியது முகவர்களுக்கு கவலையளிப்பதாக பால்முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார்.

அப்போது, பால் கலப்படம் குறித்து, முதல்வரிடம், அமைச்சர் விளக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜிக்கு, எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close