Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேகர் ரெட்டிக்குச் சொந்தமான 30 கிலோ தங்கம் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி!

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அடுத்து, நாடு முழுவதும் வருமானவரித்துறை பல்வேறு ரெய்டுகளை நடத்தியது, இதில், சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக, தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரைக் கடந்த டிசம்பர் மாதம் சிபிஐ கைதுசெய்தது. மேலும், சேகர் ரெட்டியிடமிருந்து 96 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள், 177 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Sekhar Reddy


இதையடுத்து, சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கு முதலில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் கடந்த மார்ச் 17-ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை சேகர் ரெட்டியிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரைக் கைதுசெய்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 12-ஆம் தேதி, அவர்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், சேகர் ரெட்டிக்குச் சொந்தமான, உரிய ஆவணங்களில்லாத 30 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். இவற்றின் மதிப்பு 8.57 கோடி ரூபாய் ஆகும். ஏற்கெனவே, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், சேகர் ரெட்டியின் 34 கோடி ரூபாய் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close