Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சி.பி.ஐ இலக்கு நான்தான்... ரெய்டு குறித்து கொதிக்கும் ப.சிதம்பரம்!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. இந்தச் சோதனைக்கு, காங்கிரஸ் கட்சியினர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.

P.Chidambaram


இதையடுத்து, "ஐ.என்.எஸ் என்ற நிறுவனத்தின் உரிமம், வேறு நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது, ஐ.என்.எஸ் நிறுவனத்தின்மீது மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஐ.என்.எஸ் மற்றும் டைரக்ட் நிறுவனங்களுக்கு இடையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. சென்னை, மும்பை, குர்கான் உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடைபெற்றது. ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில், சட்டரீதியிலான முறையிலேயே சோதனை நடைபெற்றது" என்று சி.பி.ஐ கூறியது.

இந்நிலையில், சி.பி.ஐ ரெய்டு குறித்து ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார். அதில், "அந்நிய முதலீடுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரத்துக்கு எந்தத் தொடர்புமில்லை. ஐ.என்.எஸ் மீடியா நிறுவனத்துக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. விதிகளின்படியே நிதித்துறை செயலாளர்கள் ஐ.என்.எஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதியளித்தனர். சி.பி.ஐ விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார். எஃப்ஐஆரில் என் பெயர் இல்லாவிடினும் நான்தான் சி.பி.ஐ-யின் இலக்கு. சோதனை நடத்தி 2 வாரங்களாகியும் சி.பி.ஐ அடுத்த கட்டமாக எதையும் செய்யவில்லை" என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close