Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்...!


கேன் குடிநீருக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வரிவிதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.  இதையடுத்து, நேற்று மாலை முதல் போராட்டம் தொடங்கியது.

Water Cane


 18% ஜி.எஸ்.டி வரியைத் திரும்பபெறும் வரை போராட்டம் நடத்தப்போவதாக தேசிய மற்றும் மாநில அரசுகளுக்குக் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பருவமழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில், பெரும்பாலான மக்கள் கேன் குடிநீரையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், குடிநீர் கேனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியது. 

முக்கியமாக, சென்னையில் இன்று 20 லிட்டர் குடிநீர் கேன் 125 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக அரசுடன், குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அரசு தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு,  குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை குறித்து அழுத்தம் கொடுப்பதாக, அரசு உறுதியளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close