Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மது நாட்டுக்கு, வீட்டுக்கு மட்டுமல்ல... காட்டுக்கும் கேடு!

யானை

யானைகள் இறப்பெல்லாம் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. மர்மமான முறையில் இறப்பென்பது தினம் தினம் செய்தியாவதும் வாடிக்கையாகி விட்டது. யானைகளின் எழுபது சதவிகித மர்ம மரணத்துக்குக்  காரணம் மனிதன் தான் என்கிறது இயற்கை. மனிதன் எதையெல்லாம் அழித்தானோ அழித்துக் கொண்டிருக்கிறானோ  அதிலிருந்துதான் தன்  அழிவை தொடங்குவான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

வனப்பகுதிகளில் மது அருந்துகிறவர்கள் மது பாட்டிலை வனப்பகுதிக்குள் வீசிவிட்டுச் செல்கின்றனர். வனப்பகுதிகளில் பயணம் செய்வோரும் போகிற போக்கில் கையிலிருக்கிற பாட்டில், பிளாஸ்டிக் பொருள்களை வனப்பகுதிக்குள் வீசிவிடுகின்றனர்.  வீசுகிற பாட்டில்களில் பாதிப் பாட்டில்கள் விழும்போதே உடைந்துவிடுகின்றன. அப்படி வீசப்படுகிற பாட்டில்கள் விலங்குகளுக்கு எத்தகைய விழைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை யாரும் அறிவதே இல்லை. 

இது குறித்து கோவையில் செயல்படும் வனஉயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை உறுப்பினர் சித்திக்கிடம் கேட்டபோது,l " வாரம் ஒருமுறை வனப்பகுதிகளை தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு சுத்தப்படுத்தி வருகிறோம். வனப்பகுதிகளில் கண்டெடுப்பதெல்லாம் பாட்டில்களும் பிளாஸ்டிக் கவர்களும் தான். யானைகளின் பாத அமைப்பு மணல் மூட்டையை போன்றது.  தரையில் உடைந்து கிடக்கும் கண்ணாடி துண்டுகளின் மீது யானை அதன்  மொத்த எடையையும் வைப்பதால் உடைந்த கண்ணாடி துண்டுகள் எளிதில் பாதங்களில் ஏறிவிடுகின்றன.  காலில் இருக்கிற பாட்டில் துகள்களோடு யானை மேலும் நடக்க ஆரம்பிப்பதால்  காயத்தின் பாதிப்பு இன்னும் அதிகரிக்கிறது. நடக்க முடியாமல் போகிற இரண்டாவது நாளில் காலில் சீழ் பிடிக்க ஆரம்பிக்கிறது.  புண்களில் இருக்கிற புழுக்கள் சதையை துளைக்க ஆரம்பிக்கின்றன. நாள் ஒன்றுக்கு முப்பது கிலோ மீட்டர்  வரை நடந்து 30 லிட்டர் நீர் பருகி, 200 கிலோ உணவு உண்ண வேண்டிய யானை, காலில் கண்ணாடித் துகள் ஏறிய  இரண்டொரு நாள்களில் உடல் தளர ஆரம்பிக்கிறது. நகர முடியாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய சூழலில் உணவில்லாமலும் நீர் இல்லாமலும் உடல் மெலிந்து பிறகு இறந்து போய் விடுகின்றன" என்கிறார். 

கோவை

தாயைப் பிரிகிற பிள்ளை எவ்வளவு கஷ்டங்களை சந்திக்கும் என்பதை உணர்கிற நாம், குட்டியோடு இருக்கிற யானை இறந்துபோவதற்குப் பின்னால் இருக்கிற வலியை உணர்வதே இல்லை. யானையோடு இருக்கிற குட்டிக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் இருந்து தான் கிடைக்கிறது. தாய்ப்பால் இல்லாமல் இருக்கிற குட்டிகள் நோய்வாய்ப்பட்டு உடல் இளைத்து இறந்து போவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 

யானை மது

மேலும் சுற்றுலா பயணிகள் சிலர் பயணத்தின்போது பழங்களை பிளாஸ்டிக் கவர்களில் எடுத்து வருகிறார்கள். வீணான பழங்களை பிளாஸ்டிக் கவரோடு வனப்பகுதிகளில் வீசி விடுகின்றனர். வனத்தில் இருக்கிற விலங்குகள் பழ வாசனையில் பிளாஸ்டிக் கவரோடு பழங்களை  உண்டு விடுகின்றன. பிளாஸ்டிக் கவரை உண்பதால் விலங்குகள் எத்தகைய பிரச்னைகளை சந்திக்கின்றன என்று யூடியூபில் ஒரு நிமிடம் தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள். 

உடல் மெலிந்து நடமாடுகிற யானைகளையும் விலங்குகளையும்  பார்த்து "அய்யோ பாவம் அதுக்கென்ன பிரச்னையோ" என்கிறோம். எப்போது உணர்வோம் நாம் தான் அவற்றுக்கு பிரச்னை என்று...

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close