Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புழல் சிறையில் ஒரே மாதத்தில் விசாரணைக் கைதிகள் இருவர் பலி !

சென்னை போரூரில், பிப்ரவரி மாதம் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கைதாகி  புழல்சிறையில் இருந்த செந்தில் என்ற இளைஞர், இன்று (மே-29) சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. கழிப்பறைக்குப் போனவர், தன்னுடைய லுங்கியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்கிறது போலீஸ்.

 puzal

சென்னை புழல்சிறைக்கும் தற்கொலைகளுக்கும் அப்படி என்னதான் தொடர்பு இருக்குமோ தெரியவில்லை. மே மாதம் 8 ஆம் தேதியன்று காதலி நிவேதாவை கார் ஏற்றிக் கொன்றதாகக் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளையராஜா,  சிறைக்கு வந்த மறுநாளே தன்னுடைய லுங்கியால் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ராம்குமார் என்ற இளைஞர், புழல்சிறையில் மின்சார கேபிளைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. இத்தனைக்கும்,  சாதாரண கைதி என்ற அளவீட்டுக்குள் வரமுடியாதவர், ராம்குமார். சுவாதி என்ற பெண்ணை ரயில் நிலையத்தில் கொலைசெய்ததாகத் தேடப்பட்டு, போலீஸில் சிக்கியவர் ராம்குமார். அப்போதும் கழுத்தை அறுத்துக்கொண்டு ராம்குமார் தப்பிக்க முயன்றதாகச்  சொல்லப்பட்டது.

நவீன வசதிகளுடன் 221 ஏக்கர் பரப்பளவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை என்ற தகுதியுடன், கடந்த 2006 ஆம் ஆண்டு, முதல்வர் கருணாநிதியால் மத்திய புழல் சிறைச்சாலை திறக்கப்பட்டது. ஒரேநேரத்தில் மூன்றாயிரம் கைதிகளை அடைக்கும் வசதி கொண்டது.
30 அடி உயர புழல்சிறை சுவற்றின் மீது, ஒன்றரை அடி உயரத்துக்கு மின்வேலி, சிறை வளாகத்தைச் சுற்றிலும் 15 கண்காணிப்புக் கேமராக்கள். இது தவிர,  கண்காணிப்புக் கோபுரங்களும் கொண்டவை இந்தச் சிறை.குற்றவாளிகளைத் திருத்தி அனுப்பவே சிறைகள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். சிறைக்குப் போகின்றவரைத் திரும்ப அனுப்பாமல் இருக்கவும்தான் சிறை என்ற நிலை மிகவும் ஆபத்தானது!
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close