Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் ஓட்டை விழலாமா?

காவல்துறை மட்டுமல்லாது, அனைத்து அரசுத் துறையிலும் பணியாற்றுவோர், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும்.  பணியிட மாற்றத்தை உரிய காலத்தில் செய்யாமல் விடுவதால், நிர்வாகச் சிக்கல்கள் எழுகின்றன.

எடப்பாடி

 தென் மாவட்ட  காவல் மண்டலத்தில்,10 ஆண்டுகளுக்கும் மேலாக உளவுப்பிரிவில் பணியாற்றியவர்கள்குறித்து  புகார் எழுந்தது.  அவர்களைப் பணியிட மாற்றம் செய்ய மேலதிகாரிகள் உத்தரவிட்டபோதும், அதை அவர்கள் சாதாரணமாக 'கேன்சல்' செய்துவிட்டு மீண்டும் பழைய பணியிடத்துக்கே திரும்பியது அடுத்தகட்ட சர்ச்சையை உண்டாக்கியது.

தமிழ்நாடு காவல்துறையில், சென்னை செக்யூரிட்டி போலீஸ் சர்வீஸ் (எஸ்.சி.பி) பிரிவிலும் இதே குரல் தற்போது கேட்கத் தொடங்கியுள்ளது. தலைமைச்செயலகம், டி.ஜி.பி. மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்தப் பிரிவினர் சோதனைப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் போன்ற பதவிகளில் உள்ள பலர், இங்கே 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பணியிடத்தில் இருந்துவருகின்றனர் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, முதல்வரின் பாதுகாப்பு, முதல்வரின் தனிப்பிரிவு மையம், கோட்டை வளாகம் போன்ற இடங்களில் பணியில் உள்ளோர், தங்கள் அதிகாரத்  தொடர்புகளைத் தக்கவைத்துக்கொள்ளவே இதே பணியிடத்தில் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. எல்லாம் சரி, முதலமைச்சரின் பாதுகாப்புப் பிரிவிலேயே இப்படியான ஓட்டைகள் விழலாமா?
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close