Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமுருகன் காந்தி கைது... பல்வேறு தலைவர்கள் கண்டனம்!

 மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பதற்குப் பல்வேறு கட்சியின் தலைவர்கள் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளனர்.

திரு

இதுகுறித்து, இன்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குண்டர் சட்டத்தைப் பிரயோகம் செய்வதை, தமிழகத்தில் பேச்சுரிமைக்கு வாய்ப்பூட்டு போடும் நிகழ்வாகவே கருதுகிறேன். ஜனநாயகரீதியில் சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எதிராக, காவல்துறை அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடுவது கொடுமையான அதிகார துஷ்பிரயோகம்' எனக் கூறியிருந்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், 'ஜனநாயகரீதியாக போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் என்னும் தவறான சட்டத்தை அரசு பயன்படுத்துகிறது. இதை வாபஸ் பெற்றுக்கொண்டு, கைதுசெய்தவர்களை விடுவிக்க வேண்டும்' எனக் கூறினார்.

தலைவர்கள்

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, 'மோடி அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்துப் பேசிவரும் மே 17 இயக்கத்தினரின் குரல் வளையை நெறிக்கும் நோக்கில் இந்த குண்டர் சட்டம் அவர் மீது போடப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருமுருகன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தியிருப்பது ஜனநாயக விரோதம்' எனக் கூறியுள்ளார்.

'திருமுருகன் உள்ளிட்ட நால்வரும் இதுவரை வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக எந்த வழக்கும் இல்லாத நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பிரயோகித்திருப்பது தமிழக அரசின் வஞ்சக நோக்கம்' என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close