Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் இன்று மருந்துக் கடைகள் மூடல்!

ஆன்லைனில் மருந்துகள் விற்கப்படுவதைக் கண்டித்து, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

medical shop

 

ஆன்லைனில் மருந்து வர்த்தகத்தைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்தில் இன்று 30 ஆயிரம் மருந்துக் கடைகள் அடைக்கப்படுகின்றன. திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கக் கூட்டத்தில், இந்த வேலைநிறுத்தப் போராட்டம்குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் மருந்துக் கடைகள் மூடப்படுகின்றன. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், 'தமிழகத்தில் உள்ள 197 கூட்டுறவு மருந்துக் கடைகளும், 111 அம்மா மருந்தகங்களும் திறந்துதான் இருக்கும். மாலை 4 மணிக்கு மேல், அனைத்து மருந்துக் கடைகளும் திறக்கப்படும். எனவே, மக்கள் கவலைப்படத் தேவையில்லை’ என்றார். 
இந்நிலையில், ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்தில் பெரும்பாலான ஓட்டல்கள்  இன்று மூடப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 1.50 லட்சம் ஓட்டல்கள் அடைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். எனவே, உணவு மற்றும் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close