Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதி உடல்நிலை! தொண்டர்களுக்குத் தி.மு.க தலைமை முக்கிய அறிவிப்பு

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, ஜூன் 3ஆம் தேதி பிறந்தநாள் வருவதையொட்டி, தொண்டர்களுக்கு தி.மு.க தலைமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா நிகழ்வுகள், கட்சியின் சார்பில் தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செம்மையாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி, அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

80 ஆண்டு கால பொதுவாழ்வில், தமிழ்ச் சமுதாயத்தின் மேன்மைக்காக ஓய்வறியாமல் தொடர்ந்து உழைத்து, தொண்டால் பொழுதளந்த கருணாநிதி உடல்நலன் குன்றி, தொடர்சிகிச்சையிலும் ஓய்விலும் இருப்பதை, கட்சியினர் அனைவரும் நன்கறிவர். மருத்துவர்களின் அக்கறை மிகுந்த சிகிச்சையினால், கருணாநிதியின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளன்று, அவரை நேரில் காணும் வாய்ப்பு நிச்சயம் கிடைத்திடும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆவலை நிறைவு செய்திடலாம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவருக்கு இன்னும் சிறிதுகாலம் ஓய்வு தேவை என்றும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, பார்வையாளர்களைச் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகமும் கழகமுமே தனது வாழ்வு என அயராது பாடுபட்ட நம்முடைய உயிருக்கு நிகரான கருணாநிதி விரைந்து முழு நலன் பெற, கட்சித் தொண்டர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். பிறந்தநாளில் கருணாநிதியின் முகம் கண்டு, அகம் மலர்ந்து, அன்புப் பரிசுகள் வழங்கி மகிழும் அவரது உடன்பிறப்புகள் இம்முறை, கருணாநிதிக்கு ஓய்வளித்து, அவர் விரைந்து நலன் பெற உறுதுணை செய்யும் வகையில், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பதே அவருக்குத் தரக்கூடிய சிறந்த பிறந்தநாள் பரிசு என்பதை உணர்ந்து, ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close