Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெழுகுவத்தி ஏந்திய திருமுருகன் குழுவினர் மீது குண்டர் சட்டமா..? மக்கள் கருத்து என்ன..? #VikatanPeopleSurvey

மே 17 திருமுருகன்


ட்டு வருடங்களுக்கு முன்பு, தமிழர் கடலுக்கு மறுபக்கம் லட்சம் லட்சமாக மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட  ஈழத்து மக்களுக்காக இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்த்தி நீதி கேட்டு வருகின்றன தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள். அவற்றில் ஒன்றான 'மே 17 இயக்கம்' வருடாந்திரமாக மெரினாவில், மெழுகுவத்தி ஏந்தும் நினைவேந்தல் நடத்தி வருகிறது. ஈழம் தொடர்பான நிலைப்பாட்டில் ஒருமித்த கருத்துடைய ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவேந்தலில் கலந்துகொள்வார்கள். 

இந்த நிலையில்தான் கடந்த ஜனவரியில் மெரினாவில், மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு  ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் பல்வேறுபட்ட காரணங்களால் வன்முறையில் முடிந்தது. கூடவே மெரினாவில், 'மக்கள் ஒன்று கூடுவதற்குத் தடை'யும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், ஈழத்துக்கான வருடாந்திர நினைவேந்தல் நிகழ்வு, மே 17ஆம் தேதி மெரினாவில் நிகழ்த்தப்படுவதாக இருந்தது.

'மே 17 இயக்க'த்தின் ஒருங்கிணைப்பில், மே மாதம் 21ஆம் தேதியன்று மெரினாவில், மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அமைதியான முறையில் மெழுகுவத்தி ஏந்தி நினைவு கூர்ந்தார்கள். இதையடுத்து திருமுருகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 17 பேரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தது தமிழகக் காவல்துறை. கைதானவர்களை பிணையில் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த 29 ஆம் தேதியன்று 'மே 17 இயக்க'த்தின் திருமுருகன் காந்தி மற்றும் 'தமிழர் விடியல் கட்சி'யின் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தைப் பதிவு செய்துள்ளது தமிழக அரசு. மனித உரிமை இயக்கத்தினர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பதிவு செய்வது மாதிரியான நடவடிக்கைகள் அரசின் செயல்பாடுகளில் இதுவே முதல்முறை. ஆனால், மக்கள் தரப்பு இதனை எப்படிப் பார்க்கிறது? 

உங்கள் பதில் மற்றும் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.

 

loading...

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close