Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கலங்கடிக்கும் கிரண்பேடி!

அரசு உத்தரவை மதிக்காமல் மாணவர்களுக்கு இடம் அளிக்காத தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, சென்டாக் குழு அதிகாரிகளுக்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியிலுள்ள ஏழு தனியார் மருத்துவக்கல்லூரிகளில், முதுநிலைப் பட்டப்படிப்பில் அரசு இட ஒதுக்கீடாக 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஏழு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக் குழு (சென்டாக்), 88 பேரைச் சேர்க்கைக்கு அனுப்பியது. அதற்குக் கல்விக் கட்டணமாக குறைந்தபட்சம் 3 லட்சமும் அதிகபட்சம் 13 லட்சமும் கட்டணக்குழு நிர்ணயித்தது. ஆனால், அந்தத் தொகையைக் கல்லூரி நிர்வாகங்கள் ஏற்க மறுத்ததோடு, மாணவர் சேர்க்கையையும் இன்றுவரை நடத்தாமல் மாணவர்களை அலைக்கழித்துவந்தன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள்  துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்குப் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், சென்டாக் அலுவலகத்துக்கு வந்த கிரண்பேடி, திடீர் ஆய்வை மேற்கொண்டார். இதுவரை நடந்த மாணவர் சேர்க்கைகளின் விவரம், கல்விக் கட்டண நிர்ணயம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அளித்துள்ள கடிதங்கள் போன்றவற்றை ஆய்வுசெய்தார். இந்த ஆய்வு மேலும் தொடரும் எனத் தெரிவித்த கிரண்பேடி, அரசு உத்தரவை மதிக்காமல் மாணவர்களுக்கு இடமளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சென்டாக் குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த கிரண்பேடி, “சென்டாக் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் அரசே முழுப் பொறுப்பேற்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், பாதியளவு மட்டுமே நிறைவுசெய்திருப்பதால்தான் தலையிடவேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close