Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொடநாடு காவலாளி கொலை... முக்கியக் குற்றவாளி கைது: அடுத்தகட்டத்தை நெருங்கும் வழக்கு!

கொடநாடு எஸ்டேட்

கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூரை, கொலைசெய்து பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்... தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியான குட்டி ஜிஜின் என்பவர் சுமார் ஒருமாத காலத்துக்குப் பிறகு நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி ஒரு மர்மக் கும்பல் உள்ளே நுழைந்து, அங்கு பணியில் இருந்த காவலர் ஓம்பகதூரைக் கொன்றுவிட்டு, மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூரைக் கடுமையாகத் தாக்கிவிட்டும் ஜெயலலிதாவின் அறையிலிருந்த பொருள்களைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றது. இந்த வழக்கை விசாரித்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காக ஐந்து டி.எஸ்.பி-க்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் குற்றவாளிகளைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

சம்பவத்தன்று, கொடநாடு எஸ்டேட் இருக்கும் பகுதிக்குவந்த சொகுசு வாகனங்கள் குறித்து அறிந்துகொள்ள கோத்தகிரி டானிங்க்டன், குஞ்சப்பனை சோதனைச் சாவடிகளில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வுசெய்தனர். அத்துடன், இந்த வழக்குக்கு தொடர்பிருக்கலாம் என்று தேடப்பட்டுவந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ், சேலம் ஆத்தூர் அருகே நடந்த ஜிஜின் சாலை விபத்தில் பலியானார். இவரது கூட்டாளியான சயன் என்பவர், பாலக்காடு அருகே சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்து தற்போது கோவை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் காவல் துறையினர் வாக்குமூலம் பெற்று குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஈடுபட்ட 11 பேர் கும்பலில் எட்டுப்பேரை காவல் துறையினர் ஏற்கெனவே கைதுசெய்திருந்தனர். இதில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த குட்டி ஜிஜின் என்பவர் மட்டும் ஒரு மாதகாலமாகவே தலைமறைவாக இருந்துவந்தார். இந்தநிலையில் அவரைப் பிடிப்பதற்காகத் தனிப்படை ஒன்று கேரளாவில் இருந்தது. ஜிஜின் மொபைல் கால்கள் ஹிஸ்டரி எடுக்கப்பட்டு... போலீஸார் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கி, நேற்று காலையில் ஜிஜினை கைதுசெய்தனர். விசாரணையின் முதல்கட்டமாக, ''ஜிஜின், எப்படிப்பட்ட அறையின் பூட்டுகள், லாக்கர்கள், பீரோக்கள் போன்றவற்றையும் கள்ளச்சாவியைக்கொண்டு எளிதாகத் திறந்துவிடும் திறமைகொண்டவர்'' என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். எஸ்டேட்டின் அறைகளைத் திறப்பதற்கான முக்கிய வேலைகள் இவருக்குத் தரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 

எஸ்டேட்டில் கொள்ளையடித்தபின்னர், ஜிஜின் உட்பட மூன்றுபேர் காரில் தப்பித்துச் சென்றிருக்கின்றனர். கூடலூர் அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், இவரின் காரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது காவலர்களிடம், தனக்குத் தெரிந்த கூடலூரிலுள்ள வி.ஐ.பி-க்குப் போன்போட்டு அவர்மூலம் பேசச் சொல்லியிருக்கிறார் ஜிஜின். அத்துடன், அந்தப் போலீஸாருக்கு 15 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகவும் கொடுத்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளார்கள் என  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், ஜிஜினை நேற்று மாலை கோத்தகிரி மாஜிஸ்திரேட் வீட்டில் போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர். இதையடுத்து, 'ஜிஜினை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் ஸ்ரீதர் உத்தரவிட்டார். ஜிஜின் தற்போது கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். 

'ஜெயலலிதாவின் அறையிலிருந்து என்னென்ன முக்கியமான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன என்பது ஜிஜினுக்கு மட்டும்தான் தெரியும்' என்று காவல் துறையினர் நம்புகின்றனர். மேலும், வாகனச் சோதனையின்போது காவலர்களிடம் பேசிய அந்த வி.ஐ.பி யார் என்றும், அவருக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றும் ஜிஜினிடம் காவலர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

கொடநாடு எஸ்டேட்

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு மட்டுமல்லாமல், ஏன் ஜெயலலிதாவின் அறை கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்தும் போலீஸாருடைய விசாரணை, ஜிஜினின் கைதுமூலம் அடுத்தக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close