Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’கிரிவலப்பாதை விரிவாக்கம் செய்துகொள்ளுங்கள்... ஆனால், செக் வைத்தது பசுமைத் தீர்ப்பாயம்!

திருவண்ணாமலையில், கிரிவலப்பாதை விரிவாக்கப் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பசுமைத் தீர்ப்பாயம் நீக்கி யுள்ளது. அதேநேரத்தில், ஒரு மரத்தைக்கூட வெட்டக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

girivalam

திருவண்ணாமலையிலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வது வழக்கம். முக்கியமாக, பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதுபோன்ற நாள்களில், கூட்டநெரிசல் ஏற்படாமல் தவிர்க்க, கிரிவலப்பாதையை அகலப்படுத்தி, விரிவாக்கம்செய்யும் பணி கடந்தாண்டு தொடங்கியது.

கிரிவலப்பாதை விரிவாக்கப் பணியின்போது, அதிகளவிலான மரங்கள் வெட்டப்படுவதாகச் செய்திகள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து இதுகுறித்து விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கிரிவலப்பாதை விரிவாக்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டது. அதன்பின்னர், ஒரு சில நிபந்தனைகளுடன் பணிகள் மீதான தடை விலக்கப்பட்டது.

இதனிடையே, அரசு சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில், கிரிவலப்பாதை விரிவாக்கப் பணிகளுக்காக         65-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், கிரிவலப்பாதை விரிவாக்கப் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பசுமைத் தீர்ப்பாயம் இன்று நீக்கிவிட்டது. 'ஒரு மரத்தைக்கூட வெட்டாமல், விரிவாக்கம் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, 'தீர்த்தங்கள், பாதங்கள் உள்ளிட்ட வழிபாட்டு இடங்கள் பாதிக்கப்படக்கூடாது' என்றும் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close