Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டமே தெரியாதவர் சட்ட அமைச்சர்..! கலாய்க்கும் பொன்முடி

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி  நடக்கவில்லை. பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது என்று முன்னாள் தி.மு.க அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

விழுப்புரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இதனால் முக்கிய சாலையான விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை உள்பட பல வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. தற்காலிகமாக மாற்று வழித்தடங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அன்றாடம் கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, மேம்பாலம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாத ஒருவர் தமிழகத்தில் சட்டத்துறை அமைச்சராக இருக்கிறார். மாட்டிறைச்சி விவகாரத்தில் புதுச்சேரியில் தனிச்சட்டம் இயற்றுகிறார்கள். கேரளாவில் முதல்வர் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

ஆனால், தமிழக அரசோ மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க-வின் ஆட்சியல்ல. பாஜக ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. டெல்லியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை வைத்து மோடி சதுரங்க வேட்டை நடத்தி வருகிறார். கோழி, ஆடு, பன்றி இவைகளும் கால்நடைகள்தான். இவற்றிற்கெல்லாம் தடை விதிக்காமல் மாடுகளை வெட்ட தடைவிதித்திருப்பது மத வெறியைத் தூண்டுவதற்காகதான்' என்று குற்றம்சாட்டினார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close