Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்!

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த வரி வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் இந்த வரி விதிப்புக்குப் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி வரியால் வியாபாரம் பாதிக்கப்படும். வரி விதிப்புக்குப் பின்னர் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஜி.எஸ்.டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலுள்ள ஓட்டல்கள் நேற்று ஒரு நாள் மூடப்பட்டது.

இந்நிலையில் இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை மீண்டும் திரும்பப் பெற வலியுறுத்தியும், ஆன்லைன் மருந்து வர்த்தகத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலை எதிரில் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் கிருஷ்ணகிரி மாவட்ட ஓட்டல்கள் சங்க தலைவர் ஆரியபவன் நடராஜன் தலைமை வகித்தார். பேரமைப்பின் செயலாளர் செல்வமூர்த்தி, பொருளாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட மருந்து வணிகர் சங்கத் தலைவர் முரளிதரன், கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் கேசவன், கிருஷ்ணகிரி மாவட்ட போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவர் அசோக்பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.

அப்போது, 'ஜி.எஸ்.டி வரியை எளிமையாக்கி, மாற்றம் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அகில இந்திய அளவில் போராட்டம் நடத்தப்படும். ஆன் லைன் மருந்து வர்த்தகத்துக்குத் தடை விதிக்க வேண்டும். இ-போர்ட்டல் நடைமுறையை கைவிட வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close