Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகன்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டும் கூலிப்படை... பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்றக் கதறும் தாய்!

சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகன்களைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளவர்களைக் கைது செய்யக் கோரி வி.சி.க.யின் முன்னாள் நிர்வாகியின் தாய், மாவட்ட எஸ்.பி.யிடம், தனது உறவினர்களுடன் வந்து கோரிக்கை மனு அளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருந்தவர் சரவணன் (37). இவரது தம்பி சுருளி (30). இவரும் அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி இரவு 8.45 மணியளவில் சாமல்பட்டியில் அம்பேத்கர் காலனியிலுள்ள தங்களது வீட்டிலிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஜிம் மோகன் (35) என்பவர் உள்ளிட்ட 8 பேர் அரிவாள், கம்புகளோடு வந்து சுருளியின் வீட்டுக்குள் நுழைந்து சுருளியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்தச் சத்தம் கேட்டு அங்கே வந்த சரவணன், சுருளியின் மனைவி மங்கை (28) ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் தற்போது சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சரவணன், சுருளி ஆகியோரின் தாய் வேடியம்மாள் தனது உறவினர்களோடு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்து, மாவட்ட எஸ்.பி.மகேஷ்குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

'எனது மகன்கள் சரவணன், சுருளி, மருமகள் மங்கை ஆகியோர் கடந்த 28 ஆம் தேதி இரவு சுமார் 8.45 மணிக்கு வீட்டிலிருந்துபோது, அதே பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான ஜிம் மோகன், வெற்றிவேல், சித்திரைபாண்டியன், தினேஷ், வேடி, சாம்ராஜ், சுரேஷ், மணிவண்ணன் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் சேர்ந்து அரிவாளால் எனது மகன்கள் மற்றும் மருமகளை வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர்கள் உயிருக்குப் போராடியவாறு சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெற்று வரும் எனது மகன்களை ஜிம் மோகன் கூலிப்படையினரைக் கொண்டு மருத்துவமனையிலேயே கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் என்னையும், எனது உறவினர்களையும் கொலை செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.

எனவே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எனது மகன்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், ஊரிலுள்ள எங்களுக்குப் பாதுகாப்பு வழங்கிடவும், எனது மகன்களைக் கொலை செய்ய முயற்சி செய்த ஜிம் மோகன் உள்ளிட்டோரைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'

இவ்வாறு அந்த மனுவில் வேடியம்மாள் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close