Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை ஐ.ஐ.டி வளாகம் அருகே மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்!

மத்திய அரசு, கடந்த வாரம் கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்கத் தடை விதித்தது. மேலும்,  இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த உத்தரவின்படி, இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  


மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் ஆளாகத் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக  பிரதமர் மோடியுடன் கலந்தாலோசிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. 

குறிப்பாக, பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை ஐ.ஐ.டி-யில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா நடத்தப்பட்டது. இதையடுத்து, அதில் கலந்து கொண்ட மாணவர் சூரஜ் என்பவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.


இதில் காயமடைந்த சூரஜ் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பினர் ஐ.ஐ.டி வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 

குறிப்பாக, அப்போது மாட்டிறைச்சி சாப்பிட்டும் அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க முயன்றனர். இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close