Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிக்கத் தடை!

கடல் மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில்கொண்டு மீன்வளத்தினைப் பாதுகாத்திட, தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை, மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை விசைப்படகுகளைக்கொண்டு மீன்பிடிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

fishermen
 

கிழக்குக் கடல் பகுதியில், மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை உள்ள 45 நாள்கள். குமரி மாவட்டத்தின் மேற்குக் கடல் பகுதியில், ஜூன் 15 முதல் ஜூலை 29 வரை 45 நாள்களுக்கு மீன்பிடி தடைக்காலம் என கடந்த ஆண்டு வரை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, கிழக்குக் கடல் பகுதியில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 வரையிலான 61 நாள்களுக்கும், குமரி மாவட்டத்தின் மேற்குக் கடல் பகுதியில், ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்களுக்கும் மீன்பிடித் தடைக்காலம் விதிக்கப்பட்டு ஆணைகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலம் மேற்கண்ட மீன்பிடித்தடை செய்யப்பட்ட 61 நாள்களுக்கும், கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடல் மீன்களின் இனவிருத்திக்கு ஏற்ற காலமான இந்த 61 நாள்கள், மீன்பிடிப்பதை நிறுத்திவைப்பதன்மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால், அரசு வகுத்துள்ள இந்தத் தடை ஆணையின்படி இந்த 61 நாட்கள் முடியும் வரை குமரி மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


தடையை மீறி கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் விதிகள் 1983ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close