Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

7 மாடி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் விரிசல்... தி.நகரில் பதற்றம் அதிகரிப்பு!

தீ விபத்து ஏற்பட்டுள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் விரிசல் விடுவதால், தி.நகரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. 

chennai silks
 

சென்னை தி.நகரிலுள்ள 7 மாடி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில், இன்று அதிகாலை திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட துணிக்கடையிலிருந்து இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு, பற்றி எரியும் தீயை அணைக்க, ஹைட்ராலிக் வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், 5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கட்டடத்தின் ஏழு மாடிகளுக்கும் தீ பரவிவிட்டதால், புகை அதிக அளவில் வெளியேறிக்கொண்டிருக்கிறது.

எனவே, அந்த  இடம், அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அந்த வழியாகச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் 7 மணி நேரமாக எரியும் தீயால், உள்பகுதியில் சில சுவர்கள் இடிந்துவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர், தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியைப் பார்வையிட்டு வருகிறார்.  

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close