Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவில் போர் மூளும் அபாயம்! மோடியை எச்சரிக்கும் திருமாவளவன்

மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்த சென்னை ஐஐடி மாணவர்மீது நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு, கடும் கண்டனம் தெரிவிதித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்  தலைவர் தொல்.திருமாவளவன், 'சிவில் போர்' மூள்வதை மோடி அரசு தடுக்க வேண்டும்' என்று எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ஐஐடி வளாகத்தில் வகுப்புவாத சக்திகளின் வன்முறை வெறியாட்டம் தலைதூக்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் 'ஏபிவிபி' என்னும் மாணவர் அமைப்பினர், சுராஜ் என்னும் மாணவரை மூர்க்கமாகத் தாக்கியதில், அவரது வலது கண் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 'அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்' என்ற அமைப்பைச் சார்ந்தவர் என்பதாலும்  மாட்டிறைச்சிக்கு எதிரான மோடி அரசின் நிலைப்பாட்டை எதிர்க்கும் வகையில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார் என்பதாலும்தான், அவர்மீது இந்தக் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது தெரியவருகிறது.

அவ்வாறு தாக்கும்போதே, "உன்னைத் துண்டுதுண்டாக வெட்டிக் கொலைசெய்வோம்" என்றும் ஏபிவிபி அமைப்பினர் அச்சுறுத்தியுள்ளனர். மாணவர்களிடையில் திட்டமிட்டு விதைக்கப்பட்ட வகுப்புவாத வெறி அரசியலே, இத்தகைய கொலைவெறித் தாக்குதலுக்குக் காரணமாகும். இவ்வாறு, நாடு முழுவதும் வகுப்புவாத வெறியர்களின் வன்முறை வெறியாட்டம் மென்மேலும் தலைவிரித்தாட வாய்ப்புள்ளது. மாடுகளை வைத்திருக்கும் யாரையும் 'அவர் இறைச்சிக்காகத்தான் மாடுகளை வைத்திருந்தார்' என்று தாக்குவதற்கு, மிருகவதைத் தடுப்புச் சட்டத்திற்கான (1960) தற்போதைய விதிகள் வழிவகுக்கும்.

அதாவது, இது மக்களுக்கிடையிலான ஒரு 'சிவில் யுத்தத்துக்கு'த் தூண்டுகோலாக அமையும். இதை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளோம். இதற்கான ஒரு சான்றாகவே, சென்னை ஐஐடி மாணவர் மீதான தாக்குதல் அமைந்துள்ளது. காட்டுமிராண்டித்தனமான இந்தப் போக்கை, விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

மாணவரைத் தாக்கியவர்கள், தூண்டியவர்கள் அனைவரையும் தமிழக அரசு உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவருக்கு உரிய சிகிச்சை அளித்திட, தமிழக அரசு பொறுப்பேற்று, ஆவன செய்ய வேண்டும். மேலும், கேரளா மற்றும் புதுவை மாநில அரசுகளைப் போலவே, தமிழக அரசும் மாட்டிறைச்சி தொடர்பான சட்ட விதிகளை விலக்கிட வேண்டுமென மைய அரசை வலியுறுத்த வேண்டும். இத்தகைய வன்முறை வெறியாட்டம், தேசம் முழுவதும் பரவாமல் தடுத்திட ஏதுவாக, மோடி அரசு மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் தற்போது இணைத்துள்ள புதிய விதிகளை முற்றிலும் கைவிட வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close