Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளேயும் போராட்டம், வெளியேயும் போராட்டம்! திணறும் சென்னை ஐஐடி டீன்

மாட்டிறைச்சி விவகாரத்தில் மாணவர் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, சென்னை ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால், காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவிவருகிறது.

Chennai IIT

 

சென்னை ஐஐடி-யில் மாட்டிறைச்சித் திருவிழாவை ஏற்பாடுசெய்த சூரஜ் என்ற பிஎச்.டி மாணவர், நேற்று தாக்கப்பட்டார். கல்லூரியில் உள்ள வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சூரஜ் தாக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சூரஜ் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஐஐடி முற்றுகைப் போராட்டம் நடத்திவருகின்றனர். சென்னை ஐஐடி வளாகத்தினுள்ளும் மாணவர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்த விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, யாரேனும் இரண்டு மாணவர்கள் உள்ளே வரலாம் என ஐஐடி டீன் சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, தாக்கப்பட்டவர்கள் தரப்பினரும் தாக்குதல் நடத்தியவர்கள் தரப்பினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் டீன் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

iit

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close