Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விடைபெற்றார் ஜமாலுதீன்! தமிழக சட்டப்பேரவைக்குப் புதிய செயலாளர் நியமனம்!

தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக இருந்த ஜமாலுதீன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய செயலாளராக பூபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக ஜமாலுதீன் நியமிக்கப்பட்டார். இவர், 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால், அன்றைய தினமே அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவருக்கு எதிராக தலைமைச் செயலக ஊழியர்கள் போர்க்கொடி தூக்கிவந்தனர். இதனிடையே, ஜமாலுதீனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவையின் புதிய செயலாளராகப் பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, சபாநாயகர் தனபால் பிறப்பித்துள்ளார். புதிய செயலாளர் பூபதி, தற்போது பேரவையின் கூடுதல் செயலாளராக உள்ளார். 1983ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் உதவிப் பிரிவு அலுவலராகச் சேர்ந்தவர் பூபதி. இவர், எட்டு மாதங்கள் பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, சட்டப்பேரவையின் புதிய செயலாளராகப் பூபதி உடனடியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சபாநாயகர் தனபால் அறையில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close