Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெயில் படிப்படியாகக் குறையும்... 3 நாளில் தென்மேற்குப் பருவமழை!

'தமிழகத்தில், இரண்டு நாள்களுக்குப் பிறகு வெயில் படிப்படியாகக் குறையும்' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இரண்டு மாதங்களாகக் கத்தரிவெயில் மக்களை வாட்டி வதைத்துவருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இரவு நேரங்களில் மக்கள் வீட்டின் மொட்டைமாடியில் படுத்துத் தூங்குகிறார்கள். மே 29ஆம் தேதி, கத்தரிவெயில் நிறைவடைந்தது. இருந்தாலும் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

இதனிடையே, தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கிவிட்டது. இதனால், கன்னியாகுமரி, செங்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதனால், மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் இரண்டு நாள்களுக்குப் பிறகு வெயில் படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது  என்றும், மூன்று நாள்களில் தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறையில் 2 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அதிகபட்சமாக திருத்தணி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close