Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை ஐஐடி டீன்... மாணவர்கள் கொந்தளிப்பு!

மாட்டிறைச்சி விவகாரத்தில் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, சென்னை ஐஐடி வளாகத்தினுள் போராட்டம் நடத்திவரும் மாணவர்கள், போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர். 

IIT
 

சென்னை ஐஐடி-யில், மத்திய அரசின் 'இறைச்சிக்குத் தடை 'அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாட்டிறைச்சித் திருவிழாவை ஏற்பாடு செய்த சூரஜ் என்ற பிஎச்.டி மாணவர், கடுமையாகத்  தாக்கப்பட்டார். கல்லூரியில் உள்ள  'ஏபிவிபி' என்னும் மாணவர் அமைப்பினர், இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சூரஜ் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, இன்று காலை முதல் ஐஐடி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் போராட்டம் நடத்தினர்.

மாணவர்களுடன் ஐஐடி டீன் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். சூரஜ்-ன் மருத்துவச் செலவுகளைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றதோடு மேலும், சில கோரிக்கைகளையும் வைத்தனர். மாணவர்களின் கோரிக்கையை டீன் ஏற்க மறுத்துவிட்டார். எனவே, போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close