Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சுவாதி கொலை வழக்கு' படம்! டிஜிபி-யிடம் சுவாதியின் தந்தை புகார்!

'சுவாதி கொலை வழக்கு' திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி, டிஜிபி-யிடம் அவரின் தந்தை புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற மென்பொறியாளர், 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரைக் காவல்துறையினர் கைதுசெய்து, புழல் சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்த ராம்குமார், அங்கிருந்த மின்சார வயரைக் கடித்துத் தற்கொலைசெய்துகொண்டார். சுவாதி கொலையும் ராம்குமார் தற்கொலையும் பரபரப்பாகப் பேசப்பட்டன.

இந்நிலையில், இயக்குநர் ரமேஷ் செல்வன் என்பவர், 'சுவாதி கொலை வழக்கு' என்ற பெயரில் திரைப்படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனிடையே, 'சுவாதி கொலை வழக்கு' படத்துக்குத் தடை விதிக்கக்கோரி, சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், டிஜிபி-யிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

அதில், எங்களிடம் அனுமதி வாங்காமல் படத்தை எடுத்துள்ளனர். படத்தை வெளியிட்டால், மேலும் மனவருத்தம் ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close