Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கப்படுமா? - அமைச்சர் ஜெயகுமார் பதில்

சென்னை தி.நகரில் தீ பிடித்து எரிந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் ஸ்திரத்தன்மையுடன் இல்லையென்றால் இடிக்கப்படும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 
சென்னை தியாகராய நகரிலுள்ள 7 மாடி சென்னை சில்க்ஸ் துணிக்கடை கட்டடத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அங்கு, பற்றி எரியும் தீயை அணைக்க, ஹைட்ராலிக் வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், 5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 11 மணி நேரமாக போராடியும் இதுவரையில் தீயை அணைக்க முடியவில்லை. இந்த நிலையில் தீயணைப்பு பணியை நேரில் சென்று பார்வையிட்ட நிதி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர், 'காவல்துறையினர், வருவாய்துறையினர், சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறையினர் ஆகியோர் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படும். கட்டடத்துக்குள் புகை மூட்டமாக இருப்பதால் தீயை அணைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. புகைமூட்டத்தில் அருகில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று மருத்துவக் குழு ஆய்வு செய்யும். தீயை அணைக்கும் பணியில் ஆன செலவு கட்டட உரிமையாளரிடம் இருந்து பெறப்படும்.

கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்வர். கட்டடம் ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால் இடிக்கப்படும். கட்டட உரிமையாளர் விதிமுறைகளை  மீறி இருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்று தெரிவித்தார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close