Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பிழை நீக்குதல்! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு  ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு  இவ்வாண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சிறப்புப்பணி நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சிறப்புப்பணியை அனைத்து மாநிலங்களிலும் தொடங்கி, "எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது" என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கிணங்க அதிகளவில் இளைய வாக்காளர்களை, குறிப்பாக 18-19 வயதுக் குழுமத்தைச் சேர்ந்த வாக்காளர்களைப் பட்டியலில் சேர்க்க, தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 31-ஆம் தேதி நிறைவுறும் இச்சிறப்புப்பணியின்போது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

9.7.2017 மற்றும் 23.7.2017 ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. சிறப்பு முகாம்கள் நடைபெறும் அந்நாள்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்டப் படிவங்களைப் பெறுவார்கள். இச்சிறப்புப்பணியின்போது இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் பணியும் நடைபெறவுள்ளது. இறப்பு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலங்களிலிருந்து பெறப்பட்டு அதனடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியல்களிலிருந்து இச்சிறப்புப்பணியின் போது  நீக்கப்படும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close