Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விபத்து ஏற்படுத்தும் ஓட்டுநர்களை அதிரவைக்கும் தமிழக அரசு உத்தரவு!

விபத்துகளை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்குத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு விபத்துகளை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு விழிப்பு உணர்வு வழங்கும் நோக்கத்தில், போக்குவரத்துத் துறை உரிமம் வழங்கும் அதிகாரிகளுக்கு விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்களின் உரிமங்களைத் தகுதி இழப்பு தற்காலிக ரத்து செய்யும் பொருட்டு சில தெளிவுரைகளை வழங்கியுள்ளது.

அதன்படி, விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்கள் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் இரண்டு நாள்கள் புத்தாக்கப் பயிற்சியைத் தனது சொந்தச் செலவில் பயின்று அதற்கு உண்டான சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்கள் அரசு மருத்துவமனையில் உரிய அலுவலர் முன்பு ஆஜராகி உடற்கூறு பற்றிய மருத்துவச் சான்று பெற்று ஓட்டுநர் உரிமம் தகுதி இழப்புச் செய்வதற்கு முன்பு சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close