Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிருஷ்ணகிரி சின்ன ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி தூர்வாருதல்

தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தூர் வாரும் பணியைத் தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டும் எனத் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலகுறி ஏரியில் தூர்வாரும் பணி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், நகரின் முக்கிய நீர் ஆதாரமாகவுள்ள ஏரியான சின்ன ஏரியில் தூர்வாரும் பணி தொடங்கியது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை ஜே.சி.பி இயந்திரம், டிராக்டர்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டு தூர் வாரும் பணி நடந்தது. இந்தத் தூர் வாரும் பணியைக் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுகவனம், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க மாவட்ட அவைத்தலைவருமான செங்குட்டுவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் நவாப் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, கோவிந்தராசன், சுப்பிரமணி, சாந்தமூர்த்தி, காவேரிப்பட்டணம் பேரூர் கழகச் செயலாளர் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிதாநவாப், இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணை அமைப்பாளர் அஸ்லாம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அமீன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் கடலரசுமூர்த்தி, சரவணன், மாதவன், தலைமைக் கழக பேச்சாளர் கனல் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close