Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாதம் 100 ஜி.பி... முதல் 3 மாதங்கள் இலவசம்... ஜியோவின் பிராட்பேண்ட் ஜீபூம்பா!

ஜியோ

இந்திய தொலைத் தொடர்புத் துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ. அதற்கு முன்னர்வரை, இவ்வளவு பணத்துக்கு இவ்வளவு எம்.பி டேட்டா தரப்படும் எனக் கறார் காட்டிய நிறுவனங்கள், ஜியோவால் மிகுந்த சரிவினை சந்தித்தது. 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி அனைத்து நிறுவனங்களும் விலையைக் குறைத்தும், ஆஃபர்களை கொடுத்தும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தன. இதுதவிர கலங்கிப்போயிருந்த மற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஜியோ அடுத்து என்ன செய்யப்போகிறதோ எனக் கவலையில் இருந்தன. கடந்த மார்ச் மாதம் வரை இலவசமான வசதிகளைக் கொடுத்த ஜியோ நிறுவனம், அதன் பின் சேவைகளை பெறக் கட்டணம் வசூலித்தது.

4ஜி சேவையில் பயணத்தைத் தொடங்கிய ஜியோ, டி.டி.எச் சேவையிலும் ஈடுபடப்போவதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அந்த டி.டி.எச் சேவையில் 360 சேனல்கள் ஒளிபரப்பாகும் என்றார்கள். இன்னும் இதற்கான முடிவே வெளிவராத நிலையில், தனது அடுத்த ஆட்டத்தைத் துவங்கிவிட்டது ஜியோ. அந்த வரிசையில் ஜியோ நிறுவனம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஆரம்பகட்ட பரிசோதனை மும்பை, டெல்லி, அகமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோரா ஆகிய பகுதிகளில் துவங்கியுள்ளது ஜியோ நிறுவனம். அந்நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவை வரவு நிச்சயமாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அதிகமாகப் பாதிக்கும். பிராட்பேண்ட் உபயோகிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் உபயோகிக்கிறார்கள். அதனால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருக்கும். இதுதவிர, மற்ற பிராட்பேண்ட் நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும். இதற்கு ஜியோ 4ஜி போலவே மூன்று மாதங்களுக்கு பிராட்பேண்ட் இலவசம் என்பதுதான் காரணம்.

ஜியோ பிராட்பேண்ட் சேவை மொத்தம் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதிவேக இணையம் மட்டும் தேவை என்றால் குறைவான GB-யுடன் அதற்கான விலையை நிர்ணயிப்பது முதல் வகை ப்ளான். டேட்டாதான் முக்கியம் என்றால் அதன் வேகம் குறைவாகவும், அதற்கான விலையை நிர்ணயிப்பது இரண்டாம் வகை ப்ளான். இறுதியாக அதிகமான டேட்டாவும் அதற்கேற்ற அதிகமான வேகமும் இருக்கும். இதற்கு ஒருவிலை நிர்ணயிக்கப்பட்டு ஸ்பெஷல் பேக்கேஜ்ஜாக கொடுக்கப்படுகிறது.

படிப்படியாக மெட்ரோ நகரங்கள் முதல் அனைத்து நகரங்களுக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சந்தைக்கு வந்துவிடும். இந்தச் சேவையில் 100 ஜி.பி டேட்டாவிற்கு ஒரு மாத கட்டணமாக 500 ரூபாய் வரை வசூலிக்கப்படும் எனவும் தெரிகிறது. இந்தக் கட்டணம் மற்ற நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. அதுவும் 90 நாளுக்கு இலவசம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 4ஜி சேவையில் இந்த ஐடியாதான் அதிக வாடிக்கையாளர்களைப் பெற உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.. இதுதவிர, எச்.டி டிவி, ஜியோ கிளவுட், லேண்ட்லைன் போன் ஆகிய சேவையிலும் ஜியோ ஈடுபடப்போவதாகத் தகவல் வெளியாகி உள்ளன. ஆனால், இதற்கு முன்னரே ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்கத் தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக்ட் பைபர் நெட் ஹைதராபாத்தில் மட்டும் 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் தனது சேவையை வழங்கி வருகிறது. பிராட்பேண்ட் சேவையில் ஜியோ இறங்கினால், இதுவரை உச்சத்தில் இருக்கும் பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்கள் சரிவைச் சந்திக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close