Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாக்கப்பட்ட ஐ.ஐ.டி மாணவர்... நேரில் சந்தித்த ஸ்டாலின்!

மாட்டிறைச்சி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்ததால் தாக்கப்பட்ட ஐ.ஐ.டி மாணவர் சூரஜை நேற்று மருத்துவமனையில் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஸ்டலின்

சென்னை ஐஐடி-யில் மாட்டிறைச்சித் திருவிழாவை ஏற்பாடுசெய்த சூரஜ் என்ற பிஎச்.டி மாணவர், நேற்று தாக்கப்பட்டார். கல்லூரியில் உள்ள வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சூரஜ் தாக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனங்களை தெரிவித்ததோடு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.

இதனிடையே தி.மு.க செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் நேற்று சூரஜை சந்தித்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூரஜுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். இந்தச் சந்திப்பின்போது தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடனிருந்தார். மாணவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் குறித்து கல்லூரி நிர்வாகமும், சென்னை மாநகர காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென அதிமுக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close