Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை சில்க்ஸ் தீ விபத்து... காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

சென்னை தி.நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

தீ

சென்னை தி.நகரில் ஏழு மாடிக் கட்டடத்தில் சென்னை சில்க்ஸ் மற்றும் ஶ்ரீகுமரன் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்தக் கடையில் இன்று அதிகாலை தீப்பிடித்ததாக அருகிலிருந்த தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய தீயணைக்கும் பணி இப்போதுவரை நடந்து வருகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இந்நிலையில் தீயை அணைக்க நுரைக் கலவை இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்டடத்தின் மீது நுரையைப் பீய்ச்சி அடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close