Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தென்னக ரயில்வேயின் சம்பளக் குளறுபடி..இரண்டு முறை வங்கியில் பணம் ஏறியதால் ஊழியர்கள் குஷி!

தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் ஊழியர்களுக்கான ஒரு மாதச் சம்பளத்தை இரண்டு முறை டெபாசிட் செய்த அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

ரயில்

தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் சுமார் 4000-க்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கான மே மாதச் சம்பளம் இன்று வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில், மீண்டும் தவறுதலாக சம்பளப் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கான சம்பளம் இரண்டு முறை டெபாசிட் செய்யப்பட்டதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், கடைநிலை ஊழியர்கள் சிலர், பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்குப் பணம் தேவைப்பட்டதால் உடனடியாக பணத்தை எடுத்துச் செலவிட்டனர்.

தவறுதலாக இரண்டு முறை சம்பளப் பணம் டெபாசிட் செய்யப்பட்டதை தாமதமாக அறிந்த ரயில்வே கணக்குத்துறையினர், உடனடியாக கூடுதலாக டெபாசிட் செய்த பணத்தை திரும்ப தங்களது கணக்குக்கு எடுத்துக் கொண்டனர். ஆனால், முன் கூட்டியே வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துச் செலவு செய்து விட்ட ஊழியர்களின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால், அதில் இருந்து கூடுதலாகப் போடப்பட்ட தொகையைத் திரும்பப் பெற முடியாமல் தடுமாறினர்.

அடுத்த மாதச் சம்பளப் பணத்தில் இந்தக் கூடுதல் தொகையைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது பற்றி மாறுபட்ட கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஊழியர்களுக்கான ஒரு மாதச் சம்பளமாக இரண்டு முறை வங்கியில் பணம் செலுத்தப்பட்டது தொடர்பாக மதுரைக் கோட்ட அக்கவுன்ட்ஸ் பிரிவு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு கடிதத்தை அனுப்பி இருக்கிறது, தென்னக ரயில்வே. இந்த விவகாரம் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close