Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆள்பற்றாக்குறையால் தள்ளாடும் உளவுத்துறை !

தமிழகக் காவல்துறையில் ஆள்பற்றாக்குறை என்பது ஆண்டாண்டு காலமாக தொடர்கதையாகவே இருந்து வருகிற ஒன்று. ஊர்க்காவல்படை, போலீஸ் நண்பர்கள் குழு போன்றவற்றில் இருந்து காவல்துறை உதவிக்கு மனித சக்தி பயன்படுத்தப்பட்டுவருகிறது. சட்டம் -ஒழுங்கு, போக்குவரத்து, குற்றப்பிரிவு மட்டுமே மக்களின் பார்வையில் தெரிகிற காவல்பணியாக இருந்தாலும் இன்னும் ஏராளமான துறைகள் காவல்பணியில் இருக்கிறது. மத்திய குற்றப்பிரிவு, பொருளாதாரக் குற்றப்பிரிவு, சைபர் பிரிவு, ஆயுதப்படை, சிறப்புக் காவல் படை, அதிரடிப்படை என்று காவல்துறையில் இயங்கும் பிரிவுகளின் எண்ணிக்கை டபுள் டிஜிட்டில் இருக்கிறது.

காவல்

முதுகெலும்பு போன்ற ஒற்றுப்பிரிவும்(உளவுப்பிரிவு) அதில் ஒன்று. சென்னையில் அந்தப் பிரிவுக்கும் இப்போது  ஆள் பற்றாக்குறை சோதனை வந்துள்ளது. போலீஸ் வார்த்தையில் ஒரு துணை கமிஷனரின் காவல் எல்லையை காவல் மாவட்டம் என்று அழைப்பார்கள். அதாவது மயிலாப்பூர் துணை கமிஷனரின் காவல் எல்லையை மயிலாப்பூர் காவல் மாவட்டம் என்பார்கள். அதேபோல், வண்ணாரப்பேட்டை, அடையாறு, திருவல்லிக்கேணி, அண்ணாநகர்  போன்ற பகுதிகள்  காவல் மாவட்டம் என்றே அழைக்கப்படுகின்றன. ஒரு காவல் மாவட்டத்தில் எல்லைப் பரப்பு, மக்கள் தொகை போன்றவற்றின் அடிப்படையில் இரண்டு முதல் ஐந்து உதவி கமிஷனர்கள் வரையில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு மூத்த அதிகாரிதான் காவல் மாவட்டத்தின் உயரதிகாரியான துணை கமிஷனர்.  ஒரு துணை கமிஷனரின் காவல் எல்லைக்குள்  பத்து காவல் நிலையங்கள் வந்து விடுகின்றன. 

இவ்வளவு தூரம் பரந்து விரிந்துள்ள காவல் மாவட்ட எல்லையின் ஒற்றுப்பிரிவு இன்ஸ்பெக்டர்களின் எண்ணிக்கை  எத்தனை என்று பார்த்தால் ஒன்று கூட இல்லை. ஆள் பற்றாக்குறை காரணமாக இரண்டு காவல் மாவட்டத்துக்கு ஒரு இன்ஸ்பெக்டர் என்ற அளவில்தான்  காவல் பணிக்கு ஆட்கள் உள்ளனர். அடையாறுக்கு ஒரு போலீஸ் துணை கமிஷனர், மயிலாப்பூருக்கு ஒரு  போலீஸ் துணை கமிஷனர்  தனித்தனியாக பணியில் இருப்பதுபோல் (மேற்கோளுக்காக) அடையாறுக்கும், மயிலாப்பூருக்கும் தனித்தனியாக உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் இதுவரையில்  பணியில் இருந்து வந்தார்கள். இப்போது, அந்தக் கதையே மாறி இருக்கிறது. இரண்டு காவல் மாவட்டத்துக்கும்  சேர்த்து இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள ஒரே நபர்தான் உளவுப்பணியை மேற்கொள்கிறார்.

காவல்

உள்ளூர் தாதாக்கள், போதைப் பொருட்கள் நடமாட்டம், சமூக விரோத சக்திகள் கூடுதல், போராட்ட முன்னெடுப்பு, சாலை மறியல் திட்டமிடல், அரசியல் கட்சிகளின் நிலை இப்படி பல முக்கியப் பணிகளை முன் கூட்டியே 'மோப்பம்' பிடித்து 'ரிப்போர்ட்'  அனுப்பி எச்சரிக்கை செய்வது உளவுப் போலீசார்தான்... அதிகாலை ஐந்து மணிக்கே ஆரம்பித்து விடும் இவர்களின் காவல் பணி. இப்போதுள்ள நிலையில்  வண்ணாரப்பேட்டையில் ஒரு விஷயத்தை ' மோப்பம்' பிடித்துவிட்டு வருவதற்குள் வடபழனியில் ஒரு விவகாரம் சத்தமின்றி முடிந்திருக்கும்...  வண்ணாரப்பேட்டையில் இருந்து வடபழனி வரையில் ஒரே இன்ஸ்பெக்டர் மோப்பப் பணியை செய்தால்? ஊர் ஊராக இருக்காது  என்பதே  ஊரறிந்த உண்மை...
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close