Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டாவது நாளாக பற்றி எரியும் தீ... சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன்பகுதியும் இடிந்து விழுந்தது..!

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து எரியும் தீயால், காலை 7 மணி அளவில் கட்டடத்தின் முன் பகுதியும்  இடிந்து விழுந்தது.  தீயணைப்பு பணி, 26 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்கிறது. 

சென்னை, தியாகராய நகரில் உள்ள ஏழு மாடிகள்கொண்ட சென்னை சில்க்ஸ் கடையில், நேற்று அதிகாலை தீ பிடித்தது. அந்தத் தீ, ஏழு மாடிக்கும் பரவியது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சித்துவருகின்றனர். ஆனால், இதுவரை தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள், அருகில் உள்ள கட்டடங்களுக்குத் தீ பரவாமல் இருக்க, தேவையான தடுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3.20 மணி அளவில் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் வலதுபுறம் 7-வது தளத்திலிருந்து 2-வது தளம் வரை பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இருப்பினும், அருகில் உள்ள கட்டடங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. மீண்டும் கடையின் முன்பகுதியில் தீ பற்றிய நிலையில், காலை 7 மணி அளவில் முன்பகுதியும் இடிந்து விழுந்தது.

தற்போது, முன்பகுதியில் தீ வேகமாக எரிந்துகொண்டிருக்கிறது. கட்டடத்திலிருந்து கரும்புகை அதிக அளவில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தீ இன்னமும் கட்டுக்குள் வராத நிலையில், சென்னை சில்க்ஸை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் பாலம் வரையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close