Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்ணின் கையை முறித்த காவலர்; விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சம்மதம்

சென்னை ஐஐடி மாணவர் சூரஜுக்கு ஆதரவாகப் போராடிய பெண்ணின் கையை, காவலர் ஒருவர் முறித்தது தொடர்பான வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. 


சென்னை ஐஐடி வளாகத்துக்குள் மாட்டுக்கறி விருந்துவைத்த சூரஜ் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவரை, வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, சூரஜுக்கு ஆதரவாக சென்னை ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு, புரட்சிகர இளைஞர் முன்னணி, இந்திய மாணவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து, கைதுசெய்தனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரின் மணிக்கட்டுப் பகுதியை, பெண் காவலர் ஒருவர் வேண்டுமென்றே முறித்தார். பெண்ணின் கையை காவலர் முறிக்கும் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்திகளில் ஒளிபரப்பப்பட்டது. பெண் காவலரின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காவல்துறையினர் செயலைக் கண்டிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவுசெய்தனர்.

இந்த நிலையில், பெண்ணின் கையை முறித்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து, மனுத்தாக்கல்செய்தால், அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close