Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

6 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் வெற்றி செல்லும் எனத் தீர்ப்பு!

2011ஆம் ஆண்டு கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலினும், அதிமுக சார்பில் சைதை துரைசாமியும் போட்டியிட்டனர். இதில் மு.க.ஸ்டாலின் 68,677 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சைதை துரைசாமி 65,943 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.

இதனிடையே, மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சைதை துரைசாமி வழக்குத் தொடர்ந்தார். அதில், அதிகாரத்தைப் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்றுள்ளார். இதனால் அவரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், மு.க.ஸ்டாலின் வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close