Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை சில்க்ஸ் விதிமீறல்! களத்தில் இறங்கினார் டிராபிக் ராமசாமி

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து தி.நகரில் விதிமீறல் கட்டடம் தொடர்பான வழக்கை விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார்.

சென்னை உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு நாள்களுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இதனிடையே, சென்னை சில்க்ஸ் விதிமீறல் மீறி கட்டடங்கள் கட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தி.நகர் சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட  தீ விபத்து குறித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தார். அப்போது, சென்னை சில்க்ஸ் கட்டட விதிமீறலுக்குக் காரணமாக அதிகாரிகள்மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், தி.நகரில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக 2006ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, தி.நகர் கட்டட விதிமுறை மீறல் தொடர்பான வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என்று டிராபிக் ராமசாமியின் முறையீட்டை ஏற்று நீதிபதிகள் அறிவித்தனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close