Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு வழக்கில் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக போராடிய வழக்கில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 
சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மாதம் 21-ம் தேதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், இதற்கு சென்னை மாநகர காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, தடையைமீறி அந்த நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டுக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கடந்த 29-ஆம் தேதி, திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின்கீழ் திடீரெனக் கைது செய்யப்பட்டனர். 


இந்நிலையில், சென்னையிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில், திருமுருகன் காந்தி மற்றும் டைசன், இளமாறன் ஆகியோர் நேற்று மீண்டும் கைதுசெய்யப்பட்டனர். திருமுருகன் காந்திமீது 17 வழக்குகள் உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் போராடியதாக, அவர்மீது சைதாப்பேட்டை மற்றும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. தற்போது, அந்த வழக்குகளில் திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே, மேற்கண்ட வழக்குகளில் திருமுருகன் காந்தி புழல் சிறையிலுள்ள நிலையில், தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், இன்று அவர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக போராடிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்படி திருமுருகன் காந்தி மீது பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருவதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பணமதிப்பு நீக்க போராட்ட வழக்கில் கைதான திருமுருகன் காந்திக்கு எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close