Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடிக்கப்படுகிறது சென்னை சில்க்ஸ் கட்டடம்! போலீஸ் அலர்ட்

சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கப்படவுள்ளதால் அதன் பகுதியிலிருக்கும் பொதுமக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உஸ்மான் சாலையில் 7 மாடிகள் கொண்ட சென்னை சில்க்ஸ் துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் கீழ்தளத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். துணிக்கடை என்பதால் தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆறு மாடிகள் இடிந்து விழுந்தது. இருந்தாலும் தீ எரிந்துகொண்டுதான் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் இன்று காலையில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இரண்டு மணி நேரத்தில் கட்டடம் இடிக்கப்படும். இதற்கான செலவுகளைச் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் என்று தெரிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. கட்டடத்தை இடிக்க ராட்சத இயந்திரம் கொண்டுவரப்படுகிறது. கட்டட முன்புற இடிபாடுகளைக் குவித்து அதன்மீது இயந்திரம் நிறுத்தப்படவுள்ளது. இயந்திரம் நிறுத்தப்பட்டபின் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெறவுள்ளது. இடிபாடுகளை அள்ளுவதற்காக மாநகராட்சி லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. இடிபாடுகளைக் குவிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. இதனால் கட்டடம் அருகிலிருக்கும் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தைத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது, தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இனியும் இதுபோன்ற விபத்துகள் நடைபெறா வண்ணம் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க முடிவு செய்வது வரவேற்கத்தக்கது.  விதிமீறல் கட்டடம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close