Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவர்களுக்காகத்தான் மாட்டிறைச்சித் தடை சட்டம்! திருமாவளவன்

மத்திய அரசின் மாட்டிறைச்சிக்குத் தடை என்பது பசுவதைத் தடுப்பு அல்லது மாடுகளை வதை செய்யக்கூடாது என்ற நோக்கத்துக்காகக் கொண்டு வந்ததல்ல. மாடுவளர்ப்புத் தொழிலை முடக்கிவிட்டு அதை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாக ஒப்படைப்பதற்காகத்தான் மோடி அரசு முயற்சிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம், திட்டகுடியில் திருமண நிகழ்ச்சிக்குவந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அங்கனூர் கிராமத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலியாக செயல்படுகிறது மத்திய அரசு. மாட்சிறைச்சிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இச்சட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யும் வரையில் இந்திய அளவிலுள்ள அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

மத்திய அரசின் மாட்டிறைச்சிக்குத் தடை என்பது பசுவதைத் தடுப்பு அல்லது மாடுகளை வதை செய்யக்கூடாது என்ற நோக்கத்துக்காக கொண்டு வந்ததல்ல. மேலும், மாடுவளர்ப்புத் தொழிலை முடக்கிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மாடுவளர்ப்பு, இறைச்சி வியாபாரம், தோல் வியாபாரம், தீவன வியாபாரம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக ஒப்படைப்பதற்காகத்தான் மோடி அரசு முயற்சிக்கிறது. மாட்டு வணிகத்தின் மூலம் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். அனைத்து இன மக்களும் மாடுகளைப் பல்வேறு பயன்பாட்டுக்காக வளர்த்து வருவதன் மூலம் அவர்களின் பொருளாதாரமும் மேம்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக இவற்றை முடக்கிப்போட்டுவிட்டு கறிமாடு வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி பெரும் பண்ணை முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனவே பால், இறைச்சி ஆகியவற்றுக்காகப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத்தான் தற்போதுள்ள மத்திய அரசு இச்சட்டத்தை இயற்றியுள்ளது. தமிழக அரசை முழுவதுமாக மத்திய அரசு தனது கட்டுபாட்டில் கொண்டுவந்துவிட்டது. ஆளும் கட்சியான அ.தி.மு.க-வின் இருதரப்பையும் வருமானவரித்துறை மற்றும் சிபிஐ மூலம் அச்சுறுத்தி அவர்களை முழுவதுமாக மத்திய அரசின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். அதன் விளைவுதான் தமிழக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் டெல்லிக்குச் சென்று காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. இது வேதனைக்குரியதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஒரு பினாமி அரசாக மாற்றியிருப்பது ஜனநாயக விரோதமானது.

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்திமீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அதைத் திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்யவேண்டும். இந்திய அரசை கார்ப்பரேட் மயமாக்கி இருப்பதுதான் மத்திய அரசின் மூன்றாண்டு சாதனையாகும்" எனக் குற்றம்சாட்டினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close