Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக கிருஷ்ணகிரியில் கிரானைட் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தப் போராட்டம்!

கிருஷ்ணகிரி போராட்டம்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜி.எஸ்.டி எனும் நடைமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி 5, 12, 18, 28 சதவிகிதம் என 4 அடுக்காக வரி விதிப்பு இருக்கும். ஜி.எஸ்.டி கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தில் 1,211 பொருள்களுக்கு வரி விதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், விலை உயர்ந்த பொருள்களுக்கு 28 சதவிகிதம் வரி நிர்ணயம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி கிரானைட் கற்கள் விலை உயர்ந்த பொருள்கள் பட்டியலில் கொண்டு வரப்பட்டு 28 சதவிகிதம் வரி நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 400-க்கும் மேற்பட்ட கிரானைட் தொழிற்சாலைகள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மாவட்டம் முழுவதும் மலைகள் அதிகளவில் உள்ளதால் இங்கு கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கிரானைட் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் தொழிற்சாலைகளுக்கு விடுப்பு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று மட்டும் 2 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், '28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது எங்களுக்குப் பொருந்தாது, நாங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் விலை உயர்ந்த பொருள்களை உற்பத்தி செய்யவில்லை. அனைவருக்கும் தேவையான அத்தியாவசிய பொருளான டைல்ஸ்தான் தயாரிக்கின்றோம். நாங்கள் ஆடம்பர பொருள்கள் அடிப்படையில் வரமாட்டோம், மேலும் எங்களுடையது மிகப் பெரிய அளவிலான தொழிற்நிறுவனம் கிடையாது. நாங்கள் சிறு, குறு தொழில் நிறுவன அடிப்படையில்தான் வருகின்றோம். ஆகவே 28 சதவிகிதம் என முடிவு செய்யப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியை 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்' எனத் தெரிவித்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close