Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் மீண்டும் தீ... போராடும் வீரர்கள்!

சென்னை உஸ்மான் சாலையில் 7 மாடிகள் கொண்ட சென்னை சில்க்ஸ் துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் கீழ்தளத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். துணிக்கடை என்பதால் தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆறு மாடிகள் இடிந்து விழுந்தது. இருந்தாலும் தீ எரிந்துகொண்டுதான் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் இன்று காலையில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Chennai Silks

இதையடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இரண்டு மணி நேரத்தில் கட்டடம் இடிக்கப்படும். இதற்கான செலவுகளைச் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கட்டடம் அருகிலிருக்கும் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் காவல்துறை அறிவுறுத்தியது.

இந்நிலையில், சென்னை சில்க்ஸின் 4-வது தளத்தில் மீண்டும் தீ பரவியுள்ளது. இதையடுத்து, தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால், கட்டடத்தை இடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close