Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராமேஸ்வரத்தில் பிடிபட்ட 14 கிலோ கடத்தல் தங்கம்!

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 30-ம் தேதி இரவு ஆம்னி பஸ் மூலம் சென்னைக்குத் தங்கம் கடத்தப்படுவதாக மத்தி்ய வருவாய் புலனாய்வு பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அன்றிரவு ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் சோதனைச் சாவடியில் பேருந்தைச் சோதனையிட்ட அதிகாரிகள் அதிலிருந்து 7.36 கிலோ தங்கத்தைக் கைப்பற்றினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையிலிருந்து மேலும் தங்கம் கடத்தி வரவிருந்த தகவல் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்றிரவு பாம்பன் குந்துகால் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதிக்கு வந்த ஒரு நபரைச் சோதனையிட்டதில் அவரிடம் இலங்கையிலிருந்து படகு மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 6.40 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலானாய்வுத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பிடிபட்ட  நாகரெத்தினம், ராமநாதன் ஆகிய 2 பேரிடம் மத்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close