Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீயை அணைக்க தொடர்ந்து போராட்டம்... சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி ஒத்திவைப்பு...!

சென்னை தி.நகரில், ஏழு மாடி கட்டடத்தில் சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடை செயல்பட்டுவந்தது. இந்தக் கடையில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய தீயணைக்கும் பணி, 24 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. இதையடுத்து, இன்று அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

Chennai Silks

இதற்கிடையே, கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 7-வது தளத்தில் மீண்டும் தீ பரவியதால், வலது புறச்சுவர் முழுவதும் இடிந்தது. இதைத்தொடர்ந்து, "சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு நான்கு மாடி கட்டவே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம், விதிகளை மீறி ஏழு மாடிகளைக் கட்டியுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்" கூறினார்.

 

அதேபோல், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்த  அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் கட்டடம் இன்று மாலை இடிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வந்த நேரத்தில், அங்கு மீண்டும் தீ பரவியது. கட்டடத்தின், 4-வது தளத்திலும், 5-வது தளத்தின் பின் புறத்திலும் தீ பரவியது. இதனால், திட்டமிட்டபடி கட்டடத்தை இடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.


இந்நிலையில், கட்டடத்தை இடிக்கும் பணிகள் நாளை தொடங்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close