Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.ஐ.டி மாணவர் சூரஜ்ஜை நேரில் சந்தித்த வைகோ... மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை!

மத்திய அரசு, கடந்த வாரம் கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, இறைச்சிக்காக மாடு, கன்றுக்குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்கத் தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Suraj


இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை ஐ.ஐ.டி-யில் மாட்டிறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. இதையடுத்து, இதில் கலந்து கொண்ட மாணவர் சூரஜ் என்பவர் மீது, ஏ.பி.வி.பி அமைப்பைச் சார்ந்தவர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, சூரஜ் தற்போது, வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று சூரஜை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இன்று சூரஜை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Vaiko


பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, 'சூரஜ்ஜூக்கு இன்று இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. நான் பார்க்கச் சென்றபோது அவருக்கு மயக்கம் தெளியவில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள். மாணவர் சூரஜ்ஜின் உறவினர் வேணுகோபால் மற்றும் அவருடன் பயிலும் மாணவர்களிடமும் நடந்தவற்றைக் கேட்டுஅறிந்தேன். இதில் வேதனை என்னவெனில், மிகக் கொடூரமாகத் தாக்கிய மணீஷ்சிங், தானும் தாக்கப்பட்டதாகக் கூறி, கையில் கட்டுப்போட்டுக்கொண்டு காட்சி அளிக்கின்றார். ஆனால், அவர் தாக்கப்படவே இல்லை என்றும், இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக வன்முறையில் ஈடுபட்ட மணீஷ் சிங் பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் என்றும் மாணவர்கள் கூறுகின்றார்கள்.

இந்தியாவிலேயே புகழ் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களுள் ஒன்று சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் ஆகும். அங்கே நடைபெற்ற இந்தக் கொடிய வன்முறைச் சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன். கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்துத் தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

எனவே, ஐ.ஐ.டி நிறுவனத்தினுடைய இயக்குநரும், காவல்துறையினரும் நடுநிலையோடு நடந்தவற்றை விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்ட மாணவர்மீது தக்க நடவடிக்கை எடுத்து, அந்நிறுவனத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்களுக்கு அச்சமற்ற நிலையை உருவாக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்' என்று கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close