Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரு அணிகளிடையே பேச்சுவார்த்தையா?... அமைச்சர்களைப் போட்டுத்தாக்கும் பன்னீர்செல்வம்!

நாகை அவுரித்திடலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Panneerselvam

இதில் கலந்து கொண்டு பேசிய பன்னீர்செல்வம், "இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக, 40 லட்சம் தொண்டர்களின் கையெழுத்து வாங்கி அனுப்பியுள்ளோம். ஆனால் அம்மாவின் துரோகிகள் 40 கோடி ரூபாய்  லஞ்சம் கொடுத்து ஜெயிலில் உள்ளனர். இப்போது நடப்பது அம்மா ஆட்சி அல்ல. சசிகலா அம்மையாரின் குடும்ப ஆட்சி. காவிரி பிரச்னையை அம்மா வெற்றிகரமாகக் கையாண்டார். தற்போது ஆட்சியாளர்கள் அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள். இவர்களுக்கு ஜெயிலில் உள்ளவர்களை மாறி மாறி போய் பார்பதற்குதான் நேரம் சரியா இருக்கு. 3,000 நிர்வாகிகள் அங்கிருக்கிறார்கள்


ஒட்டுமொத்த தொண்டர்கள் மற்றும் மக்கள் ஆதரவு நம் பக்கம் இருக்கு. அ.தி.மு.க இரு அணியாகவுள்ள இந்தக் குழப்பத்தில், நாம் முதல்வராகி விடலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கவேண்டாம். அம்மாவுக்குத் துரோகம் செய்தவர்களின் இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். இரட்டை இலையை மீட்போம். விரைவில் தேர்தல் வரும். மறுபடியும் அம்மா ஆட்சிதான் மலரும். அம்மாவால் ஆறு ஆண்டுகாலம் கட்சியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டவர் இன்று கட்சியின் துணைப் பொதுசெயலாளர். இதை ஏற்றுக்கொள்ளமுடியுமா? 


ஜெயலலிதா மரண மர்மம் வெளிவர நீதி விசாரணை வேண்டும். எங்களது கோரிக்கையை ஏற்க பினாமி அரசு தவறிவிட்டது. இரு அணிகளும் இணையும் எனத் தவறான தகவல்களை அமைச்சர்கள் கூறுகின்றனர். குடும்ப அரசியல் ஒடுக்கப்படும் வரை தர்ம யுத்தம் தொடரும்." என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close