Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். 

கவிக்கோ

1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி பிறந்த கவிக்கோ, 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கிவந்தவர். தமிழில் கவிதைக் குறியீடுகள்குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம்பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களைப் புனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறைக் கவிஞர்களுக்கு ஆசானாகவும் இவர் விளங்கினார். 

 80 வயதாகிய இவருக்கு, சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் 2 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், இன்று அதிகாலை சென்னையில் காலமானார். 1999-ம் வருடம் 'ஆலாபனை' கவிதைக்காக சாகித்ய அகாடமி விருது வென்ற அப்துல் ரகுமான், தி.மு.க ஆட்சி காலத்தில் வக்பு வாரியத் தலைவராகவும் இருந்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close